காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் 6-வது நாளாக ஆய்வு பணியை மேற்கொண்டார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6-வது நாளாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். 50 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களையும் முதலமைச்சர் வழங்கினார்.
பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். மண்ணிவாக்கம், முடிச்சூரில் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.