இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் நபர்களுக்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இதுவரை மொத்தம் 1, 10,25,000ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 6 வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று முடிந்தது. ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களுக்கு மற்றும் மாமிசம் சாப்பிடுபவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற தவறான தகவல் இருப்பதால் அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடைபெற்றது. இந்த முகாம் 50,000 இடங்களில் நடைபெற்று இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற 6 வது தடுப்பூசி முகாமில் தற்போது வரை 20.05 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி முகாம்காக கையிருப்பில் இருந்த 66,00,000 தடுப்பூசிகளை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.