Categories
கிரிக்கெட் விளையாட்டு

6வாரம் கண்டிப்பா முடியாது…! இங்கிலாந்து தொடரில்… பங்கேற்க புது சிக்கல் …!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் கையில் காயம் ஏற்பட்டதால் அவர் ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஷின் போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா காயமடைந்தார். அவரை பரிசோதிக்க களத்திற்கு வந்த மருத்துவர்கள் ஜடேஜாவை ஸ்கேன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் இரண்டாவது இன்னிங்சில் அவரால் பந்து வீச முடியாமல் போனது.

பிசிசிஐ அலுவலர் இது குறித்து கூறியதாவது , ஜடேஜாவின் இடதுகை கட்டை விரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் ஆஸ்திரேலியாவுடனான மீதமுள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாது என்றும் அவர் கட்டாயம் ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவரால் அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும் தெரிவித்தார்.மேலும் ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஜடேஜா பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார் என்று கூறினார்.

Categories

Tech |