Categories
கரூர் மாவட்ட செய்திகள்

6 அடி உயரமுடைய வாழைத்தார்…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே வாழைமண்டி அமைந்துள்ளது. இங்கு லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கற்பூரவள்ளி, ரஸ்தாலி, பூவன் உள்ளிட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து கற்பூரவள்ளி வாழைத்தார் ஏலத்திற்கு வந்தது பொதுவாக வாழைத்தாரில் 10 சீப்புகள் வரை இருக்கும். ஆனால் 6 அடி உயரமுள்ள இந்த வாழைத்தாரில் 16 சீப்புகள் இருந்ததை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

Categories

Tech |