வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கீழ்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் 6 அடி நீளமுள்ள கருங்கல் ஒன்று உள்ளது. அந்த கல்லில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆற்காடு டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் தூக்கில் தொங்கிய நபர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுலைமான் என்பது தெரியவந்தது. இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுலைமான் வேலைக்காக அண்ணன் இம்ரான் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இம்பிரானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுலைமான் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். மேலும் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த சுலைமான் கல்லில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.