தேனியில் பெட்டிக்கடையினுள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
தேனி மாவட்டம் போடியில் விஜய் பாபு என்பவர் காளியம்மன் கோவில் அருகில் பெட்டிக் கடை ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் திடீரென்று இவரது கடையினுள் மலைப் பாம்பு புகுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜய் பாபு போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இத்தகவலின் அடிப்படையில் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கண்ணாடி கட்டுவிரியன் வகையான 6 அடி நீளமிருந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து அதனை வனத்துறையினரின் மூலம் வனப்பகுதிக்குள் விட்டனர்.