Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

6 ஆண்டுகளாக காதலித்த வாலிபர்…. அடித்து உதைத்த பெண்ணின் உறவினர்கள்…. நெல்லையில் பரபரப்பு…!!

ஒருதலை காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் வாலிபரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் வசிக்கும் வாலிபர் சென்னையில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த வாலிபர் நெல்லையில் இருக்கும் வங்கியில் வேலை பார்க்கும் இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் நேற்று இளம்பெண் வேலை பார்க்கும் வங்கிக்கு சென்று தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் இணைந்து வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |