தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த இவர்கள் அவ்வபோது தங்களது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தனர். இதனைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அது தொடர்பாக அவர்கள் அரசிடம் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் விசாரணை குழுவிடம் தற்போது விக்னேஷ் சிவன் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.