இந்திய சந்தையில் Xiaomi நிறுவனம் Redmi ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் 6.52 இன்ச் HD+LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன், பின்புறம் கைரேகை சென்சார், 3 ஜிபி ரேம், 8MP பிரைமரி கேமரா, டெப்த் கேமரா, 5MP செல்பி கேமரா, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், லெதர் போன்ற டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி ஆகிய அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
இந்த புதிய ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போன் light blue, black மற்றும் light green என 3 விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 gb ரேம், 32 gb மெமரி மாடல் விலை ரூ. 6,999 என்றும், 3 gb ரேம், 32 gb மெமரி மாடல் விலை ரூ. 7, 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனை துவங்குகிறது.