சிறு தொழில் முனைவோர் தங்கள் உற்பத்திப் பொருள்களை அனுப்ப ஏதுவாக 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடம் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முதல் பகுதியாக போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ரயில் சேவை குறிப்பிட்ட அவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு தொடங்கியது. அதன்பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணிக்க அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் சிறுதொழில் முனைவோர் தங்களது உற்பத்தி பொருட்களை அனுப்ப ஏதுவாக 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடம் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை-செங்கோட்டை, தூத்துக்குடி-மைசூர் ரயில்கள் விருதுநகரிலும், செங்கோட்டை- சென்னை சிலம்பு ரயில் ராஜபாளையத்திலும், தூத்துக்குடி மற்றும் சென்னை ரயில் சாத்தூரிலும், கொல்லம் மற்றும் சென்னை ரயில் கோவில்பட்டியிலும், பாலக்காடு மற்றும் சென்னை ரயில் ஒட்டன்சத்திரத்திலும் 5 நிமிடம் நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.