Categories
மாநில செய்திகள்

6 சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாசப்படத்தை காண்பித்து…. பாலியல் அத்துமீறல்…. பா.ஜ.க நிர்வாகி போக்சோவில் கைது…!!!

ஆறு சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே இருந்து வருகின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கடுமையான சட்டங்கள் தண்டனைகள் உருவாக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, உறவினர்கள் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டு வருகின்றது. இது கேட்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது.

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் பயத்தின் உச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பாஜக தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளராக இருக்கிறார். இவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து அந்த குழந்தைகள் தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் மகாலிங்கத்தை குத்தாலம் போலீசார் கைது செய்தனர். குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளின் பாலியல் இச்சையைத் தூண்டுதல் போன்ற சட்டப் பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |