நாமக்கல் மாவட்டத்தில் 2 சிறுமிகளை ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 7 நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், எழுபத்தைந்து வயது முதியவர் உட்பட 7 பேர் கூட்டாக சேர்ந்து இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 75 வயது முதியவர் உட்பட ஏழு பேரையும் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிகள் இருவரையும் 7 பேர் ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.அதனால் ஏழு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.