வேப்பன பள்ளி அருகே உள்ள சிகரள பள்ளி வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டு இருக்கின்றது. இதில் ஒரு யானை தனியாகவும் மற்ற இரண்டு யானைகள் சேர்ந்தும் சுற்றி திரிந்து வருகின்றது. இந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக வனத்துறையினர் சார்பில் சோலார் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒற்றை காட்டு யானை சிகரள பள்ளி அருகே அமைக்கப்பட்ட ஆறு சோலார் மின்கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் சேதமான மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
Categories