இந்தியா தடுப்பூசி போட தொடங்கி ஆறு நாட்களில் சாதனை படைத்த நாடாக உருவெடுத்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இதனை அடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் தடுப்பூசி போட தொடங்கி ஆறு நாட்களில் 10 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது. அதனால் அதிவிரைவாக தடுப்பூசி இயக்கத்தை நடத்திய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மேலும் ஒரு கோடியே 76 லட்சம் தடுப்பூசிகள் போட்ட அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 10 ஆம் இடத்திலும் உள்ளது.