இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வாரத்தில் மொத்தம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இது பொருந்தாது .உள்ளூர் விடுமுறைக்காக ஒரு சில இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
ஆகஸ்ட் 8 – முகரம் (ஜம்மு, ஸ்ரீநகர்)
ஆகஸ்ட் 9 – முகரம் (அகர்தலா, அகமதாபாத், அசைவால், பிலாபூர், நாக்பூர், டெல்லி, போபால், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, ராய்பூர், ராஞ்சி)
ஆகஸ்ட் 11 – ரக்ஷா பந்தன் (அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்பூர், சிம்லா)
ஆகஸ்ட் 12 – ரக்ஷா பந்தன் (கான்பூர், லக்னோ)
ஆகஸ்ட் 13 – தேசப்பற்று நாள் (இம்பால்), 2ஆவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 14 – ஞாயிறு
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினவிழா (இந்தியா முழுவதும்)
இதனை தொடர்ந்து அடுத்த வாரத்திலும் நிறைய விடுமுறை நாட்கள் வருகின்றன. அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ,ஆகஸ்ட் 27ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை, ஆகஸ்ட் 28ஆம் தேதி ஞாயிறு மற்றும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறையாகும். ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக நிறைய விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்களது பண பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்வது நல்லது.