Categories
மாநில செய்திகள்

6 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்…. பட்டியல் இதோ…. அரசு உத்தரவு…!!!!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் ஆறு பேராசிரியர்கள் மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனராக பணிபுரிந்து வந்த கே நாராயணசாமி செங்கல்பட்டு கல்லூரி முதல்வராகவும், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியரான சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், கடலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக திருப்பதி, திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வராக ராஜாஶ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வராக செந்தில்குமார், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவக்குமார், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக மீனாட்சி சுந்தரம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக பாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |