Categories
தேசிய செய்திகள்

6 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை…. நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம்…. பெரும் பரபரப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

அந்தவகையில் டெல்லியில்  உள்ள ஆறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்து விட்டதால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரதி, சாந்தோம், சாந்தி முகுந், சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, ஸ்டெயின்ட் ஸ்டிபன் மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது. தீரத் ராம் ஷா, யு.கே மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்து விட்டதால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |