தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை 6மாதத்திற்குள் செயல்படுத்த முதல்வர் முக.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.
அனைத்துதுறை செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டபின்பு பேசிய முதல்வர் ஸ்டாலின், நாம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து விட்டோம். அடுத்து நமக்கு இருப்பது 6மாதம் தான். ஏனென்றால் ஆறு மாதத்திற்கு பிறகு இன்னொரு நிதிநிலை அறிக்கையை நாம் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த 6மாதத்திற்குள் நாம் செயல்படுத்தவேண்டிய அறிவிப்புகளை செயல்படுத்திட வேண்டுமெனில் வேகமாக, விவேகமாக நீங்கள் செயல்பட வேண்டும். நான் இந்த அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து அமைச்சர்களை கண்காணிப்பேன் என்று சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த உடனே சொல்லி கொண்டு இருக்கேன்.
இரண்டு நாட்களாக செல்கின்ற நிகழ்ச்சிகளிலும்… கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நானே நேரடியாக கண்காணிக்க போகின்றேன் என சொல்லியுள்ளேன்.இதை அனைத்துத்துறை செயலாளர்களையும் இந்த அறிவிப்புக்குள் குறித்த காலத்திற்குள் திட்டங்களை முடிக்க கூடிய வகையில் என்னுடைய கண்காணிப்பு இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்
கொரோனா பெருந்தொற்று காரணமாக சில பொருளாதார நெருக்கடிகள் உள்ளதை நீங்களும் அறிந்துள்ளீர்கள். இந்த சூழலில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை அந்தத் திட்டப் பணிகளுக்கு முழுமையாகவும், முறையாகவும் செலவிடுவதன் மூலம் அந்தந்த அளவிற்கு நாம் பொருளாதாரத்தில் திறமையான செயல்பாடுகளை ஊக்கமளிக்க கூடிய வகையில் அமையும் என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.