இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. அன்னியசெலாவணி கையிருப்பு இல்லாததால் எரிப்பொருள், உணவு ஆகிய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இயலவில்லை. இதன் காரணமாக நாடு முழுதும் கடும் எரிப்பொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னியசெலாவணி இல்லாததால் புதியதாக எரிப்பொருள் இறக்குமதி செய்வதற்கான ஆர்டர்களை கொடுக்க இயலவில்லை. மேலும்முன்பே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களுக்கும் பணம் கொடுக்க முடியவில்லை.
இப்படி எரிப்பொருள் இறக்குமதிக்காக அன்னியசெலாவணி அதிகளவு தேவைப்படுவதால் அதனை ஈட்டுவது தொடர்பாக அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 6 மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்குமாறு ஜேவிபி கட்சி தலைவர் திஸாநாயகேவுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே சவால் விடுத்துள்ளார். சென்ற சில நாட்களுக்கு முன்பு நாட்டின் பொருளாதாரத்தை 6 மாதங்களில் மீட்டெடுப்பேன் என ஜனதா விமுக்தி பேராமுனா கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகவுள்ள அனுரா குமாரா திஸாநாயகே பெருமையாக தெரிவித்தார்.
இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர், உங்களிடம் உள்ள திட்டத்தினை நாடாளுமன்றத்தில் கொடுத்தால், அதை செயல்படுத்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும். அதற்காக உங்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் கிடைக்கலாம் என கூறினார். அத்துடன் அவர் அவ்வாறு செய்து விட்டால் தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிர மசிங்கே நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.