6 மாதத்திற்கு பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரனோ பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அரசு தடை விதித்து இருந்துள்ளனர். இதனால் தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்தங்களில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நவம்பர் 1ஆம் தேதி முதல் ராமநாதசுவாமி கோவிலில் இருக்கும் 22 தீர்த்த கிணறுகளிலும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று காலை 6 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடி சென்றுள்ளனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் களைகட்டியுள்ளது.