பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருவதால் மேலும் ஆறு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றது. இதன் காரணமாக சென்ற மே மாதம் 4-ம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை பகல் மற்றும் இரவு முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் ஆறு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் நீட்டிப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்படி பூந்தமல்லி கரையான்சாவடியில் இருந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை பேருந்துகள், லாரி உள்ளிட்டவை செல்வதற்கு அனுமதி இல்லை. ஆம்புலன்ஸ் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகின்றது.
பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு செல்ல கரையான்சாவடி சந்திப்பில் வலப்பக்கத்திலிருந்து ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று பூந்தமல்லி புறவழி சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகே இருக்கும் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு இடது புறமாக வரவேண்டும்.
சென்னை-பெங்களூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலை செல்ல குமணன் சாவடி சந்திப்பில் இருந்து வலப்பக்கமாக சவிதா பல் ஆஸ்பத்திரி சந்திப்பு வந்து பூந்தமல்லி புறவழி சாலை இடதுபுறம் திரும்ப வேண்டும்.
கோயம்பேடு, மதுரைவாயில் பக்கமாக பூந்தமல்லிக்கு செல்லும் பேருந்துகள் குமரன் சாவடி வழியாக கரையான் சாவடி சென்று வலப்பக்கம் திரும்பி ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை புற வழிசாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகே இருக்கும் அம்பேத்கர் சிலை வழியாக சென்று பூந்தமல்லி பேருந்து நிலையத்தை அடையலாம். இதர வாகனங்கள் சபிதா ஆஸ்பத்திரியில் இருந்து புறவழிச் சாலை வழியாக வந்து பூந்தமல்லி பாலம் வழியாக செல்லலாம்.
பேருந்துகள் மாங்காட்டில் இருந்து பூந்தமல்லி செல்வதற்கு கரையான்சாவடி சந்திப்பில் இருந்து வலப்பக்கம் திரும்பி அம்பேத்கர் சாலை வழியாக சென்னீர்க்குப்பம் சென்று பூந்தமல்லி புறவழிச் சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகே இருக்கும் அம்பேத்கர் சிலை ஓரமாக சென்று பேருந்து நிலையத்திற்கு செல்லலாம். இதர வாகனங்கள் மாங்காடு சந்திப்பிலிருந்து வலது புறமாக சவிதா ஆஸ்பத்திரி சந்திப்பு வழியாக பூந்தமல்லி புற வழிச்சாலை இடதுபுறம் திரும்பி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வரலாம்.
சென்னை-பெங்களூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டையில் இருந்தும் ஓ.ஆர்.ஆர் வெளிவட்ட சாலையில் இருந்து, பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு வரும் மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல் செல்லலாம். வணிகம் மற்றும் கனரக வாகனங்கள் சென்னை-பெங்களூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் பி.எஸ்.என்.எல் இடது புறமாக திரும்பி பூந்தமல்லி புறவழிச்சாலையாக வழியாக செல்லலாம்.
போரூர், மாங்காடு வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் பூந்தமல்லி புறவழிச்சாலை வலது புறம் திரும்பி சவிதா ஆஸ்பத்திரி வழியாக சென்று குமணன் சாவடி வழியாக செல்லலாம். ஆவடி வழியாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி புறவழி சாலையில் சென்னீர்குப்பம் சென்று இடது புறமாக செல்லலாம்.