சென்னை பெரம்பலூர் பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(21). இவர் கீர்த்தனா(21) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். கீர்த்தனா அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் ராமச்சந்திரன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே செல்போனைப் பார்த்துக் கொண்டு நேரத்தை கழித்து வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தநிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கிடையில் எப்போதும் போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கீர்த்தனா உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.