Categories
சென்னை மாவட்ட செய்திகள்

6 மாதமாக வருமானமே இல்லாத மண்டபத்திற்கு சொத்து வரியா – ரஜினிகாந்த் வழக்கு

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ஆறரை லட்சம் ரூபாய் சொத்து வரிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்க்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனுவில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மத்திய மாநில அரசுகள் விதித்த ஊரடங்கு உத்தரவால் ராகவேந்திரா மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததாகவும் எனவே சென்னை மாநகராட்சி விதித்த ஆறரை லட்சம் ரூபாய் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

Categories

Tech |