அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆறு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னா மற்றும் சைபர் தடுப்பூசி போட அந்நாட்டு அரசுஅனுமதி அளித்துள்ளது. அதன்படி அந்நாட்டில் 5 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 1.8 கோடி குழந்தைகள் தடுப்பூசி போட தகுதியானவர்கள் ஆவர். இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் அனுமதி தந்துள்ளது.
அதனை போல பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் டீன்ஏஜ் வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தவதற்கு உணவு மற்றும் மருந்துகள் அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு வரை இந்த வயதினருக்கு சைபர் தடுப்பூசி மட்டுமே அனுமதி அளித்திருந்தது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் வருகின்ற திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகம் ஒரு சில மாதங்கள் தடுப்புசி செலுத்தும் பணியை தொடர முடிவு செய்து உள்ளது. இதற்கான லட்சகணக்கான டோஸ் தடுப்பூசி மாகாணங்கள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் மருந்து கல் கடைகள் ஆகியவை முன்பே ஆர்டர் கொடுத்து விட்டது.