Categories
தேசிய செய்திகள்

6 மாத குழந்தையுடன் தவிப்பு… சாதித்துக் காட்டிய பெண்… நெகழ்ச்சி சம்பவம்…!!!

பெண்கள் பலரும் பல துறைகளில் முயற்சி செய்து சாதனை படைத்து வருகின்றனர். பெண்களுக்கு சமையல் செய்ய மட்டுமல்ல, சாதித்து காட்டவும் தெரியுமென்று அனைவரும் நிரூபித்து வருகின்றன. பல துறைகளில் தற்போது பெண்கள் தான் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்கின்றனர். பல இன்னல்களையும், அவமானங்களையும் தாண்டியும் மிகவும் கஷ்டப்பட்டு சாதிக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது. கேரளா மாநிலம் வர்க்கலாவை சேர்ந்த ஆனி சிவா என்ற பெண், திருமணமாகி 6 மாத கைக்குழந்தை இருந்தபோது அவரது கணவர் அவரை வீட்டைவிட்டு துரத்திவிட்டார்.

இருப்பினும் அந்தப் பெண் ஆறு மாத குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற வைராக்கியமும், அரசுத்துறையில் எப்படியாவது ஒரு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் வாழ ஆரம்பித்தார். அந்தப்பெண் ஐஸ்கிரீம் குளிர்பானங்கள் விற்பது உள்ளிட்ட கிடைத்த பல வேலைகளை செய்து தனது குழந்தையையும் காப்பாற்றி அரசு தேர்வுக்கு படிக்கும் அதே ஊரில் ஆய்வாளராக பணியில் சேர்ந்துள்ளார். இவரது தன்னம்பிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |