தெலுங்கானா மாநில பகுதியில் பாரதி என்பவர் போலி சாமியார் பேச்சை கேட்டு தனது 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பாரதி என்பவருக்கு ஆறு மாதம் ஒரு குழந்தை இறந்துள்ளது. இவர் கடந்த சில மாதங்களாக தனிமையில் இருந்து வந்துள்ள காரணத்தினால் பைத்தியம் பிடித்ததுபோல் இருந்துள்ளார். இதையடுத்து சாமியாரிடம் சென்று கேட்டபோது அவருக்கு நாகதோஷம் இருந்ததாகவும், அதை நிவர்த்தி செய்ய ஆறு மாத குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை எடுத்து அதை நம்பிய பாரதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூஜை அறையில் சாமி படத்திற்கு முன்பு குழந்தையை வைத்து பூஜை செய்து, பின்னர் கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் நரபலி கொடுத்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வரவே இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.