உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோதுமை உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் கோதுமை கொள்முதலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோதுமை கொள்முதல் செய்வதற்கான கால அவகாசம் இந்த மாத தொடக்கத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது வருகின்ற 31ம் தேதி வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், பீகார், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Categories