கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த 6 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது ஒரு வருடத்தை கடந்த பின்னும் நம்மை பாடாய்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் எப்படி பரவியது அதேபோன்று இப்போது அதிகரித்த தொடங்கியதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிகம் பரவி வருகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என எச்சரித்துள்ளனர்.