அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகம் செய்ய உள்ளதாக கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது புதுச்சேரி மாநிலத்தின் கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சில அறிவிப்புகளை வெளியிட்டார். புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 1044 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார்.
மேலும் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை வழங்க ஏற்பாடு செய்யப்படும். புதுச்சேரியில் உள்ள 60 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த பணி ஆணை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து சிக்கலை குறைப்பதற்காக 37 சிக்னலை சரி செய்வதற்கு மூன்று கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ரூபாய் ஒன்று கட்டணத்தில் பயணிக்கும் சிறப்பு பேருந்துகளில் இலவசமாகவே பயணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கல்வி மற்றும் விளையாட்டின் தரத்தை உயர்த்த வேலைபாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.