Categories
தேசிய செய்திகள்

6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி செய்யப்பட்டு அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடம் அறிமுகப்படுத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக மைக்ரோசாஃப்ட் உடன் ஒத்துழைப்பது ஆக வாரியம் அறிவித்தது. மேலும் மைக்ரோசாப்ட் இந்த படிப்புகளுக்கான கையேடுகளை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னதாக 8 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஒரு புதிய பாடமாக டேட்டா சயின்ஸ் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |