Categories
மாநில செய்திகள்

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மே 5 முதல் 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவத்தேர்வு, 8 முதல் ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு நடைபெறுகிறது. எனவே தேர்வுக்கு மாணவர்கள் முழுவீச்சில் தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

Categories

Tech |