Categories
தேசிய செய்திகள்

6 வது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர்… தட்டிக்கேட்ட 3 வது மனைவி… போலீசார் வழக்குபதிவு…!!!

வினோதங்களுக்கு சற்றும் பஞ்சமில்லாத உத்திரபிரதேசத்தில் ஒரு வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆறாவது முறையாக திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர் மீது முத்தலாக் கொடுக்கப்பட்ட அவருடைய மூன்றாவது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர் சவுத்ரி பசீர். தற்போது 6வது முறையாக சைஸ்தா என்ற பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அவருடைய மூன்றாவது மனைவியான நக்மாவுக்கு தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த ஜூலை 23ம் தேதியன்று பஷீரை சந்தித்து நக்மா பேசியபோது, பசீர் அவரை அடித்து உதைத்து மட்டுமல்லாமல், முத்தலாக் கூறி விவாகரத்து செய்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த நக்மா, தங்களுக்கு 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், திருமணத்திற்கு பிறகு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அடுக்கடுக்கான புகார்களை அவர்மீது கூறியுள்ளார். பஷீர் செய்த கொடுமைகளை விவரித்து சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

நக்மாவின் புகாரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சவுத்ரி பஷீர் மீது ஆக்ராவின் மாந்தோலா காவல் நிலையத்தில், இஸ்லாமிய பெண்கள் திருமண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆக்ரா எஸ்பி கூறியுள்ளார். ஏற்கனவே அவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், முன்னதாக ஒரு வழக்கில் 23 நாட்கள் அவர் சிறையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |