ஐபிஎல் போட்டியில் ஐந்தாவது முறை சாம்பியனான மும்பை இந்தியன்சின் சோகம் தொடர்கின்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் அந்த அணி 18 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் தோல்வியை தழுவியது. மும்பை அணி தொடர்ந்து 6வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது. நடப்பு தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளில் இதுவரை ஒன்றில்கூட மும்பை அணி வெற்றி பெறவில்லை.
இந்தநிலையில் தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், மும்பை அணியின் தொடர் தோல்விக்கு நானே பொறுப்பு ஏற்று கொள்கிறேன். எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற கடுமையாக போராடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.