சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கல்யாண சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு கல்யாணசுந்தரம் 6 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியிடம் சில்மிஷம் செய்த குற்றத்திற்காக கல்யாணசுந்தரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் கல்யாண சுந்தரத்திற்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.