6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு சாகும் வரை கடுங்காமல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் நடுத்தெருவை சேர்ந்த சரவணன்(50) என்பவர் சென்ற 2020 ஆம் வருடம் தனக்கு சொந்தமான டிராக்டரை எடுத்துக்கொண்டு ஒரு வயலுக்கு உழவு பணிக்கு சென்றார். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த 6 வயதுடைய ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்து சென்று சோளக்காட்டில் வைத்து பாலியல் வனஸ்காரம் செய்துள்ளார். இது பற்றி சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மத்திய சிறையில் அடைத்தார்கள்.
மேலும் குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கானது மகிளா அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சரவனுக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை கடுங்காவல் சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.