Categories
உலக செய்திகள்

6 வயது சிறுமியை கொன்ற 14 வயது சிறுவன் ..!!வெளியான பிரேத பரிசோதனை முடிவுகள் ..!போலீசால் கைது .!

அமெரிக்காவில் 14 வயது சிறுவனால்  கடத்தி கொலை செய்யப்பட்ட  6 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் இண்டியானாவை  சேர்ந்த 6 வயது சிறுமியான கிரேஸ் ரோஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென காணாமல் போயுள்ளார். தகவலறிந்த போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர் .சிறுமி  காணாமல் போன 2 மணி நேரத்திலே அவர் உயிரிழந்து உடல் மரங்கள் அடர்ந்த பகுதியில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கிரேஸ் உயிரிழந்த வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன் போலீசால் கைது செய்யப்பட்டான்.

மேலும் அவன் சிறுவன் என்பதால் அவனுடைய பெயர் மற்றும் புகைப்படங்கள் வெளியிடவில்லை.இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட முடிவில் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. வழக்கு குறித்து பேசிய போலீஸ் அதிகாரியான டெரெக் டியேட்டர், சிறுமி கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகவும் இதுவே குற்றவாளி சிறுவன் இல்லாமல் வயது வந்த நபராக இருந்திருந்தால் அவரை அணுகிய முறையே  பயங்கரமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் வழக்கு சம்பந்தமாக சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் . இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |