Categories
சினிமா தமிழ் சினிமா

“6 வருடங்களாக டார்ச்சர் செய்கிறார்” வாலிபர் மீது நடிகை காட்டம்…. எதற்காக தெரியுமா….?

பிரபல நடிகை தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி இளைஞர் ஒருவர் வற்புறுத்துவதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நித்யா மேனனுக்கு மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக சமீப காலமாக இணையத்தில் தகவல்கள் தீயாக பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியா மேனன் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது நடிகை நித்யாமேனன் என்னுடைய திருமணம் குறித்து பரவும் வதந்திகளுக்கு காரணம் சந்தோஷ் வர்க்கி என்ற இளைஞர் தான் என்று கூறியுள்ளார்.

இந்த இளைஞர் கடந்த 6 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி தொந்தரவு வருகிறார். இதுவரை 30 நம்பர்களை நான் பிளாக் செய்துள்ளேன். அப்படி இருந்தும் அந்த இளைஞர் என்னை விடாமல் தொந்தரவு செய்து வருவதோடு, என்னுடைய பெற்றோருக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வருகிறார். என்னுடைய அம்மா அப்பா இதுவரை யாரிடமும் கோபப்படாத நிலையில் சந்தோஷ் வர்க்கிடம் பலமுறை கோபமாக பேசி அவரை திட்டியுள்ளனர். மேலும் சந்தோஷ் வர்க்கியின் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு பலர் என்னிடம் கூறியும் நான் அவர் ஏதோ பிரச்சனை இருக்கிறார் என்று நினைத்து புகார் அளிக்காமல் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |