தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்தியா மேனன். இவர் நடிப்பில் வெளியாகி உள்ள 19(1)(ஏ) மலையாளத்திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன் இடம் சந்தோஷ் வர்க்கி என்பவர் அவரை திருமணம் செய்யப் போவதாக கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய நடிகை நித்யா மேனன், அவர் சொல்வதை நம்புகின்றவர்கள் முட்டாள்கள்.
ஆறு வருடங்களுக்கு மேலாக என்னை தொடர்ந்து அவர் கஷ்டப்படுத்தினார். அவருக்கு எதிராக புகார் அளிக்க அனைவரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் நான் அவரை மன்னித்து விட்டேன்.அவரின் 30க்கும் மேற்பட்ட போன் நம்பர்களை நான் பிளாக் செய்யும் நிலை ஏற்பட்டது என்று கூறியுள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டுக்கு வெளிப்படையாக பதிலடி கொடுத்த சந்தோஷ் வர்க்கி, “நித்யா மேனனிடம் கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2021 ஆம் ஆண்டு வரை பழகினேன்.
அவருக்கு நிச்சயம் செய்து விட்டதாக அவருடைய அம்மா கூறினார்.ஆனால் வேறு யாரிடமும் அவருக்கு பந்தமில்லை சிங்கிள் தான் என அவரின் அப்பா கூறிவிட்டார். இதனால் நான் குழம்பினேன். இது தெரிந்திருந்தால் நான் அவர் பின்னால் சென்று காதலித்து இருக்க மாட்டேன். நான் 30-க்கும் மேற்பட்ட நம்பரில் இருந்து அழைத்ததாக அவர் கூறினார்.இந்திய சட்டப்படி ஒருவருக்கு எத்தனை சிம் கார்டு எடுக்க முடியும் என்று மக்களுக்கு நன்றாக தெரியும் . என் மீது பாலியல் துன்புறுத்தல் என வழக்கு தொடர முயற்சி செய்தனர்.இப்போது அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறியுள்ளார்.