Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6, 6, 6, 6, 6, 6, பார் மகனே…. “அப்பா எப்படி அடிக்குறேன்னு”…. கண் சிமிட்டாமல் பார்த்த குழந்தை…. கொண்டாடிய யுவராஜ்…. வைரல் வீடியோ.!!

இங்கிலாந்துக்கு எதிராக சிக்ஸர் அடித்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், தனது மகனுடன் வீடியோ பார்த்து கொண்டாடினார் யுவராஜ் சிங்..

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் 15 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்தார். 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியில் யுவராஜ் T20I கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் ஆனார்.. இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக இந்த சாதனையை அவர் படைத்தார். அது இன்றளவும் மறக்க முடியாத ஒன்று.. இந்த நாளுடன் சிக்ஸர் அடித்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கொண்டாடியது.. மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்..

இந்நிலையில் திங்கள்கிழமை (செப்டம்பர் 19), இங்கிலாந்துக்கு எதிராக இதேநாளில் நிகழ்த்தப்பட்ட சாதனையை 15 வது ஆண்டு விழாவாக யுவராஜ் கொண்டாடியுள்ளார் . யுவராஜ் சிங் தனது சமூக வலைதளமான ட்விட்டரில்  சிக்ஸர் அடித்த வீடியோவை தொலைக்காட்சியில் பார்ப்பதை பதிவிட்டுள்ளது மட்டுமில்லாமல், “15 ஆண்டுகளுக்குப் பிறகு இதைப் பார்க்க ஒரு சிறந்த துணையைக் கண்டுபிடித்திருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் அவர்தனது மகன் ஓரியன் கீச் சிங்கை மடியில் அமர வைத்து சிக்ஸரை ரசிக்கிறார்.. அந்த குழந்தையும் கண் சிமிட்டாமல் பார்க்க, ஒவ்வொரு சிக்சருக்கும் தனது மகனின் கையை பிடித்து உயர்த்தி காட்டி கொண்டாடினார்.

அட்டகாசமான பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்தார். வெறும் 12 பந்துகளில் தனது அரைசதத்தை அடித்து உலக சாதனை படைத்தார்.. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில், டாஸ் வென்ற மென் இன் ப்ளூ அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ராபின் உத்தப்பாவின் விக்கெட் வீழ்ந்தபோது யுவராஜ் பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். பின் யுவராஜ் 6 பந்துகளில் 14 ரன்கள் என ஆடிக்கொண்டிருந்தார்.. தொடர்ந்து ஆண்ட்ரூ பிளின்டாஃப் வீசிய 18ஆவது ஓவரில் இரண்டு தரமான பந்தில் 2 பவுண்டரிகளை விளாசினார். ஓவரின் கடைசி பந்திலும் பவுண்டரி விளாசினார். இதனால் கடுப்பான பிளின்டாஃப் கடைசி ஷாட் மோசமானது என வம்பிழுக்க, யுவராஜ் என்ன சொன்னாய் என கேட்டார்.. இருவரும் வாய் வார்த்தையால் சண்டை போட, பிளின்டாஃப் உன் தொண்டையை அறுத்து விடுவேன் என்ற வகையில் ஸ்லெட்ஜிங் செய்தார்.. அம்பெயர் வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்…

இதனால் கொந்தளித்த யுவராஜ் வாயால் பதிலடி கொடுத்தால் போதாது என்று அடுத்த 19 ஆவது ஓவரில் 6,6,6,6,6,6  என ஆறு திசையிலும் அடித்து பேட்டால் பதிலளித்தார்.. கடைசியில் இந்த சண்டையில் பலி கடாவானர் ஸ்டூவர்ட் பிராட்.. இறுதியில் இந்தியா 218 ரன்கள் எடுக்க, பின் ஆடிய இங்கிலாந்து 200 ரன்கள் எடுத்தது.. இதனால் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகேந்திர சிங் தோனியின் அணி பைனலில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையையும் வென்றது. யுவராஜ் அந்த போட்டியில் அணிக்கு ஒரு முக்கிய வீரராக இருந்தார். 38 வயதான அவர் 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியிலும் தனித்துவமானவர், அவர் ஒரு உலகக் கோப்பையில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் ஆல்ரவுண்டர் மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த சாதனையில் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளுக்கு 4 ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் அடங்கும். 2019 ஆம் ஆண்டில், யுவராஜ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 304 ODIகள், 58 T20Iகள் மற்றும் 40 டெஸ்ட் போட்டிகளில், யுவராஜ் தனது சூப்பர் ஃபீல்டிங், கடுமையான பேட்டிங் மற்றும் புத்திசாலித்தனமான பந்துவீச்சு மூலம் தனது அணிக்கு போட்டிகளை வெல்லக்கூடிய ஒரு வீரராக இருந்தார்.

 

Categories

Tech |