Categories
மாநில செய்திகள்

காலை 6-7; இரவு 7-8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் – அதிரடி கட்டுப்பாடு விதிப்பு …!!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசால் இந்த நேரம் என்பது வழங்கப்பட்டிருக்கிறது.

தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பது காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது மாசு இல்லா தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை கொண்டாடக்கூடிய நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்து வெளிப்படுத்துவார்கள். தொடர்ந்து அதிகமான பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபடும். இதனை கட்டுப்படுத்தவும், அதே போன்று ஒலி மற்றும் காற்று  மாசினால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மனதளவில் பாதிக்கப்படாத வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்கும்  நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு காலை 6:00 மணி முதல் இரவு 7 மணி வரையிலும்,  இரவு 7:00 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் ஒதுக்கீடு செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேபோன்றுதான் இந்த ஆண்டும் தமிழகத்தை பொறுத்தவரை காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலும்,  இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு,  உடல் நலன் ஏற்படக்கூடிய பாதி ப்புகள் குறித்தும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கல்லூரிகள், பள்ளிகள், தேசிய பசுமை படைகள் மற்றும் பல்வேறு அரசு சார்ந்த துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களோடு கலந்து ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகளையும்  மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தீபாவளியை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகளையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. பொதுமக்களை பொறுத்தவரை குறைந்த ஒலியுடன்,  குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளில் முன் அனுமதி உடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறது.

அதேபோல அதிக ஒலி எழுப்பும்  மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், அமைதி காக்க கூடிய காக்கப்படக்கூடிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனவும் அறிவித்தப்பட்டிருக்கிறது. குடிசை பகுதிகள்,  எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும்,  இதுபோன்று தவிர்க்க வேண்டிய நடைமுறைகளையும் கூட தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியம்செய்தி குறிப்பின் மூலமாக தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிக்கப்படாத பட்டாசுகளை,  அரசு அனுமதித்த உள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளி கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இது தான் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறது.

Categories

Tech |