Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

யாரும் தப்பிக்க முடியாது… ஆங்காங்கே சிக்கிய நபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி சென்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சீலநாயக்கனூர் பகுதியில் வசிக்கும் பச்சைமுத்து, செல்வராஜ், காளியப்பன் ஆகியோர் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதன்பின் அவர்களிடம் இருந்த 350 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காவிரி ஆற்றைக் கடந்து மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்திச் சென்ற கூத்தனூர் பகுதியில் வசிக்கும் ஆனந்தன், சசிகுமார் ஆகிய 2 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |