Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

6 நாள் ஆச்சு…… இன்னும் முடியல…… ரூ2,00,00,000 தாண்டிய உண்டியல் பணம்……!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் தசரா திருவிழாவை முன்னிட்டு காணிக்கையாக உண்டியலில் 2,86,71,715 ரூபாய் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். அதேபோல் இந்த வருடமும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால் பக்தர்கள் விழாவிற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே காப்புகட்டி, விரதம் இருந்து பின்,

Related image

சாமி அலங்கார வேடமிட்டு ஊரிலுள்ள அனைவரிடமும் ஊர் ஊராகச் சென்று பொதுமக்களிடம் பணம் வசூலித்து அதனை பத்தாம் நாள் சூரசம்ஹார விழாவின்போது உண்டியலில் செலுத்துவார்கள். அதன்படி திருவிழாவை முன்னிட்டு 13 நிரந்தர உண்டியல்கள் உடன் கூடுதலாக 63 உண்டியல்கள் பக்தர்களுக்காக பொருத்தப்பட்டிருந்தன. இதையடுத்து திருவிழா முடிந்த நிலையில், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக உண்டியலில் உள்ள பணம் எண்ண வந்தது. இதில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும், கிராம மக்களும் பணம் எண்ணுவதற்கு உதவி செய்தனர். அதில் 2,86,71,715ரூபாய் ரொக்கமும், 123.8 கிராம் தங்கமும் கணக்கிடப்பட்டுள்ளது.

 

Categories

Tech |