Categories
உலக செய்திகள்

6 நாட்கள் சிறை தண்டனை… உண்மை தெரிந்த பின் ஏற்பட்ட பரபரப்பு… பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கி சமாதானம்…!

சம்மதமின்றி ஆறு நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்த வாலிபருக்கு கனடா அரசாங்கம் நிரந்தர குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.

கனடாவிற்கு முனைவர் பட்டம் பெறுவதற்காக மமாடி ஃபாரா கமாரா என்ற நபர் மாணவர் விசாவில் வந்துள்ளார். ஒருநாள் போலீசாரின் துப்பாக்கியை ஒரு கருப்பின இளைஞர் பறித்துச் சென்றார். இதனைப் பார்த்த மமாடி ஃபாரா கமாரா உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு அடைத்துள்ளார். அதன் பிறகு அவர் தன் வீட்டிற்குச் சென்றார்.

சிறிது நேரத்திற்குப் பின் அவரது வீட்டிற்கு போலீசார் வந்தனர். இவர்தான் அவசர உதவி எண்ணை அழைத்தவர் என்று தெரியாமல் மமாடி ஃபாரா கமாராவை கீழே தள்ளி அவரது முகத்தில் மிதித்து முரட்டுத்தனமாக அடித்து கைது செய்துள்ளனர். கொலைக்குற்றம் சாட்டப்பட்டு 6 நாட்களுக்கு சிலையில் இருந்தபின் போலீசாரை தாக்கியவர் இவர் இல்லை என்று தெரியவந்தது.

அதன்பிறகு மமாடி ஃபாரா கமாராவை போலீசார் விடுவித்து மன்னிப்பு கேட்டனர். இச்சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகையால் குற்றம் செய்யாமலேயே கைது செய்து தண்டனை உள்ளாகிய மமாடி ஃபாரா கமாராவுக்கு கனடாவில் நிரந்தர வாழ்விட உரிமை வழங்க, கனடா நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

Categories

Tech |