Categories
தேசிய செய்திகள்

“டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து” 6 பேர் பலி… 11 பேர் படுகாயம்..!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். 

டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி நீண்ட நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த பயங்கர தீவிபத்தில் 6 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Image result for At least five people have been killed and 11 injured after a fire broke out in a multi-storey building in Zakir Nagar, Delhi,

மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். தீக்காயங்களுடன் படுகாயமடைந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர தீவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Categories

Tech |