Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 133ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728ல் இருந்து 18,545ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 139 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 508 பேர் ஆண்கள், 309 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 11,725 ஆண்களும், 6,815 பெண்களும், 5 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 11,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.70% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 4,42,970 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 42 அரசு மற்றும் 28 தனியார் மையங்கள் என மொத்தம் 70 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 வயதுக்குட்பட்ட 1,122 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 15,796 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,627 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |