Categories
மாநில செய்திகள் வானிலை

6 மாவட்டங்களுக்கு… கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
நிவர், புரேவி புயலுக்குப் பின்னர் தமிழகத்தில் மழை குறைந்திருந்தாலும், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தை பொருத்தவரை தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |