அதிமுக வழிகாட்டுதலில் இபிஎஸ் தரப்பில் 6 பேரும், ஓபிஎஸ் தரப்பில் 5 பேரும் இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் கடந்த ஒரு மாதமாக இருந்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் நீடித்துக்கொண்டே நீடித்து வந்த அரசியல் பரபரப்பு நேற்றோடு சமரசத்துக்கு வந்தது. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் அதிகாரம் மிக்க பொறுப்பு வழங்கப்படும் என்றும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கையான 11 பேர் கொண்ட கட்சி வழிகாட்டல் குழு அமைக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வழிகாட்டல் குழுவில் இபிஎஸ் தரப்பில் 6 பேரும், ஓபிஎஸ் தரப்பில் ஐந்து பேரும் இடம் பெறுவார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இ.பி.எஸ் ஜெயக்குமார், சி.வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், அன்வர்ராஜா, தங்கமணி, வேலுமணிக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஓ.பி.எஸ், பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.டி.சி பிரபாகரன், சுப்புரத்தினம், தேனி கணேசன், பாலகங்கா ஆகியோர் 11பேர் கொண்ட குழுவில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.