மக்கள் நீதி மயத்தில் மேலும் 4 பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சில ஆதரவு இருப்பதை வாக்கு சதவீதம் காட்டியது. இதை அடுத்து மக்கள் நீதி மையத்தின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கட்சியில் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் தலைவர் , துணைத் தலைவர் , செயலாளர் , பொதுச்செயலாளர் 6 பேர் செயலாளர் என்ற முறையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அருணாசலம் என்பவர் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வந்த நிலையில் மேலும் 5 பேர் இந்த பொதுச்செயலாலாளராக தேர்வு செய்து 6 பொதுச் செயலாளர்கள் பதவி மக்கள் நீதி மையத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. அதில் ஐந்து பேர் அறிவிக்கப்பட்ட சூழலில் மேலும் ஒருவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.அருணாச்சலம் , மௌரியா , ரங்கராஜன் , உமாதேவி மற்றும் பசீர் அகமது பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கட்சியை நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் வகையில் சென்னை , காஞ்சிபுரம் , சேலம் , கோவை , விழுப்புரம் , திருச்சி , மதுரை , திருநெல்வேலி என எட்டு மண்டலமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஒவ்வொரு ஒருங்கிணைப்பு பிரிவின் கீழும் 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .