பொள்ளாச்சியை போல சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அண்மையில் பெண் ஒருவர் கொடுத்துள்ள மனுவில் மோகன்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து மீண்டும் தொந்தரவு செய்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறை சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கத்தின் தலைவராக உள்ளார். இவர் சொந்தமாக இரண்டு ஆட்டோக்கள் உள்ளன. அதில் ஒன்றை மோகன்ராஜூம் , மற்றொன்றை அவரின் நண்பருக்கு வாடகைக்கு கொடுத்து தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார்.
பின்னர் மோகன்ராஜிடம் போலீசார் கைப்பற்றிய செல்போனில் 7 பெண்களை பலவந்தமாக மிரட்டி பலாத்காரம் செய்த வீடியோ காட்சியை கண்டு போலீசார் அரண்டு போயினர்.அதில் 6 பெண்கள் மற்றும் ஒருவர் கல்லூரி மாணவி என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.விசரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.மோகன்ராஜ் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மோகன்ராஜ் அட்டகாசம் தங்க முடியாமல் மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து தனிமையில் இருந்து வந்த மோகன்ராஜ் அவனது நண்பனின் மனைவியிடம் நல்லவன் போல நடித்து 2_ஆவது திருமணம் செய்துள்ளான். 2_ஆவது திருமணம் செய்த பெண்ணும் இவனுடைய தொந்தரவால் பாதிக்கப்பட்டு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். தனது அரசியல் செல்வாக்குடன் கெத்தாக வலம் வந்த ஆட்டோ மோகன்ராஜை கொத்தாக பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவன் ஒரு சீரியல் ரேப்பிஸ்ட் என்ற திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து தன்னுடைய ஆட்டோவில் வரும் பெண்களிடம் நல்லவன் போல நடிப்பதும் , அவர்களின் கஷ்டங்களை கேட்டுக் கொண்டு பண உதவி செய்வதும் என பழகி தனது வீட்டிற்கு வர வைத்து பாலியல் பலாத்காரம் செய்து , அதை வீடியோ எடுத்து மீண்டும் , மீண்டும் தொந்தரவு செய்வான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவனது பாலியல் அட்டூழியத்தை வெளியில் சொல்லாமல் இருக்க இவன் அரசியல் செல்வாக்கோடு வளம் வந்ததுதான் காரணம் என்கின்றனர் போலீஸார்.
கல்லூரி மாணவிகளை ஏமாற்றி காதலிப்பது போல நடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த மேட்டூர் பகுதியை சேர்ந்த சபரி அபிசேக் என்பவனை 24_ஆம் தேதி போலீசார் கைது செய்தது , அவனது செல்போனில் இருந்த 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றிய நிலையில் 25ந்தேதி காமுகன் ஆட்டோ மோகன் ராஜ் சிக்கி இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.