Categories
அரசியல் மாநில செய்திகள்

6 தொகுதி என்பதை விட…. லட்சியம் தான் முக்கியம்…. பாஜகவை வெல்வோம் – முத்தரசன்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கியது. இதனை சிறுத்தைகள் தொண்டர்கள் கொண்டாடி வந்தனர். மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து இந்த மூன்று கட்சியுடன் மட்டுமே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் 6 தொகுதிகளை ஒதுக்க திமுக அறிவித்ததால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. பின்னர் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “தேர்தலில் எண்ணிக்கையைவிட லட்சியம் தான் முக்கியம் பாஜகவை திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |